வடக்கு பகுதிக்கான ரயில் சேவை மீண்டும் வழக்கமான ரயில் போக்குவரத்திற்கு முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மறுதினம் (24) முதல் வடக்கு ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை இயக்கப்படும் யாழ்தேவி ரயிலை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், யாழ்தேவி ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக முதலாம் வகுப்பு (குளிரூட்டப்பட்ட) மற்றும் இரண்டாம் வகுப்பு ஆசனங்களுக்கு முன்பதிவு செய்யும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.