யாழ்ப்பாணம்: கட்டிடத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி

 


யாழ்ப்பாணத்தில் கட்டிடத்தின் மாடியில் இருந்து தவறி விழுந்த குடும்பத் தலைவர் ஒருவர் இன்று (டிசம்பர் 16) மதியம் உயிரிழந்தார். அச்செழு, நீர்வேலி பகுதிகளைச் சேர்ந்த 62 வயதான மாணிக்கம் தட்சணாமூர்த்தி என்பவரே இவ்வாறு மரணமடைந்தார்.

குறித்த நபர் நேற்று (டிசம்பர் 15) தாவடிப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது கீழே தவறி முதல் தளத்தில் விழுந்துள்ளார்.

இதனால் அவர் மிகவும் காயமடைந்த நிலையில், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சைகள் பயனளிக்காமல் அவர் இன்று மதியம் இறந்துபோனார்.

அவரது சடலத்தை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் பரிசோதனை செய்தார்.

புதியது பழையவை