துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது

 


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நள்ளிரவில் மீண்டும் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் அறிவித்துள்ளது.

TK 733 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அதன் தரையிறங்கும் சக்கரப் பகுதியில் (Landing Gear) கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக விமானத்தை மீண்டும் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. விமானத்தின் எடையைக் குறைப்பதற்காக, வான்பரப்பில் வட்டமிட்டு எரிபொருளை வெளியேற்றும் (Fuel Burning) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குறித்த விமானம் இன்று அதிகாலை 12.28 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிலிருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் எவ்விதச் சேதமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட துருக்கி ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்கவிலேயே அவசரமாகத் தரையிறங்க முயற்சித்து வருகின்றது.

விமானத்தின் தரையிறங்கும் சக்கரப் பகுதியில் (Landing Gear) ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குறித்த விமானம், எரிபொருளைக் குறைக்கும் நோக்கில் விமான நிலையத்திற்கு அருகில் சிலாபத்தை அண்மித்த வான்பரப்பில் சுமார் 400 அடி உயரத்தில் வட்டமிட்டுக் கொண்டிருப்பதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிக எரிபொருளுடன் அவசரமாகத் தரையிறங்கும் போது ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்ப்பதற்காகவே, எரிபொருளை வெளியேற்றும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதியது பழையவை