தமிழகத்தின் பாளையங்கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாடசாலையில் மதுபானம் அருந்திய ஆறு மாணவிகள் கல்விச் செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
மாணவிகள் மதுபானம் உட்கொள்ளும் காணொளி ஒன்று வெளியாகிப் பரவியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தமிழகச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
பாடசாலையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட அந்த மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
