அதிகரிக்கும் வெளிநாட்டு பணவனுப்பல் - இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

 


இலங்கைக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் கிடைக்கும் பண அனுப்பலின் அளவு, கடந்த நவம்பர் மாதத்தில் 673.4 மில்லியன் அமெரிக்க டாலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான மொத்தப் பண வரவு 7.19 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் கிடைத்த மொத்தத் தொகையானது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 20.7 சதவீதம் கூடுதலான வளர்ச்சியை அடைந்துள்ளது என்றும் மத்திய வங்கி சுட்டிக் காட்டியுள்ளது.

வெளிநாட்டுப் பணம் அனுப்புதலில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை பலம் பெறச் செய்வதில் முக்கியப் பங்களிப்பைச் செய்கிறது.

புதியது பழையவை