யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எம்.பிக்கள் இடையே கடும் வாதம்

 


யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண உதவிகள் தொடர்பான சுற்றுநிருபம் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த வாதம் வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கருத்து வெளியிடும் வேளையில், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இடைமறித்ததைத் தொடர்ந்து, “குட்டி நாயைப் போல குரைத்துக் கொண்டிருக்க வேண்டாம்” என சிறீதரன் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அர்ச்சுனா எம்.பி, “ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நாய் என அழைப்பது சரியானதா?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், அரசியல் நடத்தப் படிப்பறிவு அவசியம். கைநாட்டு அரசியலில் ஈடுபடும் தமிழரசுக் கட்சியினருக்கு இத்தகைய நடத்தை புரியாது எனவும் அவர் விமர்சனம் முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த சிறீதரன் எம்.பி கடும் தொனியில், “உனக்கு படிப்பறிவு இருக்கிறதா? நாங்கள் கைநாட்டு என்றால் நீ கால்நாட்டா?” எனக் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் சபை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதியது பழையவை