வெலிப்பன்ன பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மூன்று வயது சிறுமி உயிரிழப்பு

 


வெலிப்பன்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுத்கம – மத்துகம பிரதான வீதியின் 5ஆம் கட்டை பகுதியில் நேற்று முன் தினம் (25) மாலை நிகழ்ந்த போக்குவரத்து விபத்தில், மூன்று வயதுடைய சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்த சிறுமி தனது பெற்றோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் மத்துகம நோக்கி பயணித்து வந்த வேளையில், எதிர்புறமாக வேகமாக வந்த கெப் வகை வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தின் விளைவாக காயமடைந்த சிறுமி, அவரது தந்தை மற்றும் தாய் ஆகியோர் உடனடியாக தர்கா நகர அரச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுமி அங்கு உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், காயமடைந்த பெற்றோர் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக நாகொட அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துடன் தொடர்புடைய கெப் வகை வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக வெலிப்பன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை