தையிட்டி விகாரை காணி உரிமை விவகாரம் தொடர்பில் அரசின் நடவடிக்கை

 


யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரிவின் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள விகாரை தொடர்பான காணி உரிமை விவகாரத்தை ஆராய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்

இந்த விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலையீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

புத்தசாசன, மத மற்றும் கலாசார பிரதி அமைச்சர் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே இந்த தகவல்களை தெரிவித்தார்.

மேலும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நியாயமான தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தொடர்பான சர்ச்சை தற்போது அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலைமையில், குறித்த பிரச்சினையை அமைதியான முறையில் தீர்ப்பதற்காக அரசாங்கம் நேரடியாக தலையீடு செய்துள்ளதாக கமகெதர திசாநாயக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை