புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் நோக்கில், சாவகச்சேரி நகரம் மின் விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டு, அதன் தொடக்க நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 6.30 மணியளவில், நகராட்சி மன்ற தவிசாளர், உபதவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் இணைந்து, மின்னொளி அலங்காரத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
நகராட்சி மன்ற தவிசாளர் வ. ஶ்ரீபிரகாஸ் மற்றும் உபதவிசாளர் ஞா. கிஷோர் ஆகியோரின் கருத்துத் திட்டத்திற்கு அமைவாக, நகரப் பகுதி முழுவதும் மின்னொளி அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறு மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டுள்ள சாவகச்சேரி நகரத்தை, பொதுமக்கள் பெரும் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு வருகின்றனர்.