யாழ்ப்பாணத்தில் 13 வயதான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, மாமன் உறவுமுறை கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபருக்கு 43 வயது. யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த இந்த நபர், கடந்த 2021-ஆம் ஆண்டு இந்தச் சிறுமியை வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.
இதுகுறித்து கடந்த 08-ஆம் தேதி மானிப்பாய் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து, காவல்துறையினர் அந்நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர் அவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.
