யக்கலமுல்ல கரகொட பகுதியில் அமைந்துள்ள தேயிலைத் தொழிற்சாலையில் நேற்று (29) ஏற்பட்ட மின்சார விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற வேளையில், குறித்த தொழிலாளி தொழிற்சாலையின் கேரேஜ் பகுதிக்குள் வாகனமொன்றை கழுவிக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் மின்சாரம் தாக்கியதில் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக கரபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மின்சாரக் கோளாறு மற்றும் சம்பவ சூழ்நிலைகள் குறித்து யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
