குருணாகல் – லுணுவில பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரு பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (26) நடைபெற்றுள்ளது. அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியதன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 18 வயதுடைய பாடசாலை மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
