பிரித்தானியாவின் லண்டனில் சிறுமி ஒருவரைக் கவர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையைச் சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனில் புகலிட தங்குமிடத்தில் வசித்து வந்த 15 வயதுச் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்முறைக்குள்ளாக்கியதாக, இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 20 வயதான யாஷின் ஹிமாசர என்ற இலங்கையர் மீதே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இளைஞனின் கொடூர நடவடிக்கை
கடந்த நவம்பர் முதலாம் திகதி மேற்கு லண்டனில் உள்ள பெல்தாமில் பகுதியில், சிறுமியின் விருப்பத்துக்கு எதிராக அழைத்துச் சென்ற பின்னர், அவரை அடித்து, கழுத்தை நெரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சிங்கள மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் தனது பெயர் விபரங்கள் மற்றும் பிறந்த தேதியை உறுதிப்படுத்தினார்.
கடத்தல், பாலியல் வன்புணர்ச்சி, துன்புறுத்தல், சிறுமியுடன் பாலியல் செயற்பாடுகள் மற்றும் வேண்டுமென்றே கழுத்தை நெரித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஹிமாசர மறுத்துள்ளார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி வரை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.