இனிவரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என தேசிய இரத்தின மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் மேலதிக பணிப்பாளர் இந்திக பண்டார தெரிவித்தார்.
நேற்றைய நிலவரப்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூபா 3 இலட்சத்து 57 ஆயிரமாக பதிவாகியுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்து வரும் நிலையில், இலங்கையில் தங்க விலை அதிகரிக்கும் வேகம் ஒப்பீட்டளவில் சற்றுக் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போது சர்வதேச சந்தையில் தங்கத்தின் ஒரு அவுன்ஸ் விலை 4,479 அமெரிக்க டொலர்களாக உள்ளது. நத்தார் பண்டிகை முடிவடைந்த பின்னர் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என அமெரிக்க பொருளாதார வல்லுநர்கள் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறுகிய காலப்பகுதிக்குள் தங்கத்தின் விலை இவ்வாறு திடீரென உயர்வடைந்தமை குறிப்பிடத்தக்கது எனவும் தேசிய இரத்தின மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் மேலதிக பணிப்பாளர் கூறினார்.