புயலால் சேதமடைந்த பதுளை பாடசாலைகளுக்கு பிரதமர் நேரில் ஆய்வு

 


தித்வா சூறாவளி தாக்கத்தால் பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இந்த ஆய்வு விஜயத்தின் போது, மீகஹகியுல தேசியப் பாடசாலையையும் பிரதமர் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சூறாவளியால் ஏற்பட்ட சேத நிலை மற்றும் பாடசாலைகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை விரைவில் மீளத் தொடங்குவதற்கான செயற்பாட்டு திட்டங்கள் தொடர்பிலும் இந்த விஜயத்தின் போது ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில், ஊவா மாகாண ஆளுநர் கபில ஜெயசேகர, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிது சமன் ஹெனநாயக்க, ஊவா மாகாண தலைமைச் செயலாளர், மாகாண சபை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

புதியது பழையவை