டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்ட Rebuilding Sri Lanka நிதியத்திற்கு, மலையக மக்களின் பங்களிப்பாக 10 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரத்தினபுரி “உதவும் கரங்கள்” அமைப்பின் உப தலைவர், நேற்று (24) முற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவிடம் குறித்த நன்கொடைக்கான காசோலையை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.
இந்த நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், மேலும் உதவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
