தம்மிக்க ரணதுங்கவுக்குப் பிணை - அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

 


ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளும், சந்தேக நபரின் சட்ட ஆலோசகர்களும் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் பெற்றோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவையும் சந்தேக நபராகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஊழல் தடுப்பு ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

புதியது பழையவை