வெள்ள பாதிப்புக்கு நட்டஈடு இல்லாமல் வாடும் விவசாயிகள்

 


வெள்ளம் மற்றும் பிற அனர்த்தங்களால் சேதமடைந்த தமது வயல் நிலங்களுக்கு இதுவரை நட்டஈடு வழங்கப்படவில்லை என தெஹியத்தக்கண்டிய, லிஹினியாகம மற்றும் முருதகஸ்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வேதனை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு மகா பருவ நெற்செய்கையின் போது ஏற்பட்ட சேதங்களுக்கு வழங்கப்பட்ட நட்டஈட்டுத் தொகை, அரசியல் தலையீடுகளால் தகுதியற்ற நபர்களிடம் சென்றுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

உண்மையில் பாதிக்கப்பட்ட தங்களுக்கு இதுவரை எந்த நிதியுதவியும் கிடைக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனை எதிர்த்து, பல விவசாயிகள் தெஹியத்தக்கண்டிய விவசாய சேவை மத்திய நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலன்னறுவை மாவட்ட விவசாய சேவை ஆணையாளர் அருண வீரகோன் கருத்து தெரிவிக்கையில், வெள்ளத்தால் வயல் நிலங்கள் சேதமடைந்த 4,620 விவசாயிகளுக்கு அரசாங்கம் ஏற்கனவே 471 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

எனினும், தகுதி உள்ள பல விவசாயிகள் இன்னும் அந்த நிதியை பெறவில்லை என்ற நிலைப்பாட்டில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

புதியது பழையவை