ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் கைது

 


பொரளை – மிஹிந்து சென்புர பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சோதனையின் போது அவரிடம் இருந்து 490 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் எனவும், மேலதிக விசாரணைகள் பொரளை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

புதியது பழையவை