யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

 


யாழ்ப்பாணத்தில் மது அருந்திய நிலையில் இருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான தீர்மானம் எடுத்துத் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக தகவல்களின்படி, குறித்த நபர் கடந்த சில நாட்களாக மன உளைச்சல் மற்றும் விரக்தி நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 18ஆம் திகதி வியாழக்கிழமை இரவு அவர் மது போதையில் காணப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனை நிறைவடைந்ததன் பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

புதியது பழையவை