சீமான் , தமிழ்த் தேசிய பேரவை இடையிலான சந்திப்பு


 

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கும், தமிழ்த் தேசிய பேரவையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நீலாங்கரையில் அமைந்துள்ள சீமானின் இல்லத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பு நேற்று (19.12.2025) காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி, சுமார் இரண்டு மணி நேரம் வரை நீடித்தது.

சந்திப்பின் போது, தமிழர் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையில் ஒரு சமஷ்டி அரசியல் யாப்பை உருவாக்குவதற்காக ஒன்றிணைந்து குரல் கொடுத்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், ஐக்கிய அரசியல் யாப்பை நிராகரிக்க வேண்டிய தேவை, ஈழத்தமிழ் கடற்தொழிலாளர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டிய அவசியம் உள்ளிட்ட விடயங்கள் முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டன.

அத்துடன், முதலமைச்சருடன் முன்னர் விவாதிக்கப்பட்ட விடயங்கள் எழுத்து வடிவில் தயாரிக்கப்பட்டு, உரிய தரப்பினருக்கு கையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதியது பழையவை