Rebuild Sri Lanka நிதியத்திற்கு ரூ.4 பில்லியனை கடந்த நன்கொடை

 


Rebuild Sri Lanka நிதியத்திற்கு இதுவரை ரூ.4,286 மில்லியனுக்கும் மேலான (சுமார் ரூ.4.2 பில்லியன்) நிதி உதவி கிடைத்துள்ளதாக, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த நிதியில் ரூ.4,263 மில்லியன் தொகை உள்நாட்டு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் பெற்றதாகவும், மீதமுள்ள தொகை வெளிநாட்டு நாணயங்களாக நேரடியாக வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

மொத்தமாக பெறப்பட்ட நிதியின் அமெரிக்க டொலர் மதிப்பு 13.8 மில்லியன் டொலர்களை கடந்துள்ளதாகவும், அதில் வெளிநாட்டு நாணயமாக மட்டும் பெறப்பட்ட தொகை 6 மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி, பூட்டான், இத்தாலி, கனடா, ஐக்கிய அரபு இராச்சியம், நியூசிலாந்து, மாலத்தீவு, சவுதி அரேபியா, பிரான்ஸ், கொரியா உள்ளிட்ட மொத்தம் 43 நாடுகளிலிருந்து இந்த நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சூரியப்பெரும தெரிவித்தார்.

புதியது பழையவை