பேரிடர் நிலைமை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12ஆம் திகதி முதல் மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே உறுதிப்படுத்தியுள்ளார். அவரது அறிவிப்பின்படி, மீள ஆரம்பமாகும் பரீட்சைகள் ஜனவரி 20ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெறும்.
நாடு முழுவதும் 2,086 பரீட்சை மையங்களில் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதுடன், பரீட்சை நடவடிக்கைகளைச் சீராக முன்னெடுக்க 325 இணைப்பு நிலையங்கள் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடைத்தாள்களை பாதுகாப்பாக சேகரித்து ஒழுங்குபடுத்துவதற்காக 32 பிராந்திய சேகரிப்பு நிலையங்கள் செயல்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.