2026ல் 4–5% பொருளாதார வளர்ச்சி இலக்கு – மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை

 


கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கைப் பொருளாதாரத்தில் காணப்பட்ட வளர்ச்சி வேகம் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டால், 2026 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி 4 முதல் 5 சதவீதம் வரை எட்டக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள், நிதி ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் முயற்சிகள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் தெளிவான நேர்மறை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இந்தச் சாதகமான நிலைமை தொடர்ந்தால், நடப்பு ஆண்டிலும் நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புதியது பழையவை