Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வுகள் நாளை (09) அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளன.
அதன்படி, அனுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, ஹந்துன்கம, ராஜாங்கனய, சிறிமாபுர ஆகிய பகுதிகளிலும், குருநாகல் மாவட்டத்தில் நிகவெரட்டிய, விதிகுலிய சந்தி, ரிதீகம மற்றும் தொடம்கஸ்லந்த பகுதிகளிலும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுகின்றன.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமும், நிரந்தர வீட்டு வசதியும் வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
