வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள ஆற்றுப்படுக்கை பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள ஆற்றுப்படுக்கைகளில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளதாக திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து, குறித்த மாவட்டங்களில் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.