தங்க விலையில் மீண்டும் உயர்வு, பவுணுக்கு ரூ.3,000 அதிகரிப்பு

 


நேற்றைய தினம் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வடைந்ததைத் தொடர்ந்து, 24 கரட் கொண்ட ஒரு பவுண் தங்கம் ரூ.359,000க்கு விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 2ஆம் திகதி, 24 கரட் கொண்ட ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ.356,000 ஆக இருந்த நிலையில், தற்போது அது ரூ.3,000 உயர்வடைந்துள்ளது.

இதன் அடிப்படையில்,

  • 24 கரட் ஒரு பவுண் தங்கம் – ரூ.359,000

  • 22 கரட் ஒரு பவுண் தங்கம் – ரூ.332,000

என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,

  • 24 கரட் ஒரு கிராம் தங்கம் – ரூ.44,875

  • 22 கரட் ஒரு கிராம் தங்கம் – ரூ.41,500

என்ற விலைகளில் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதியது பழையவை