பிலிப்பைன்ஸ் நாட்டின் பாகுலின் கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நில அதிர்வின் தீவிரமும் அதன் ஆழமும் பிலிப்பைன்ஸ் நில அதிர்வு ஆய்வு மையம் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ஆகியவற்றால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிந்தைய அதிர்வுகள் (Aftershocks) ஏற்படக்கூடும் என்பதால், மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் அல்லது பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
