டக்ளஸ் தேவானந்தா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட நால்வர் மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

 


நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவர்களது இரண்டு மகன்களுடன் தற்போது மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலை வட்டாரங்களை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று இதனை செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்களுக்காக குடும்பத்தினரால் வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாள் முதல் மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான உணவையே பெற்றுவருவதாகவும், அவருக்குத் தேவையான தினசரி மருந்துகளும் வழங்கப்பட்டுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதியது பழையவை