நீதித்துறை விவகாரங்களில் சட்டவாக்கம் தலையிட முடியாது – எதிர்க்கட்சியின் தெரிவுக்குழு கோரிக்கையை சபாநாயகர் நிராகரிப்பு

 


நீதித்துறை அதிகாரிகளின் நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவியுயர்வுகள் தொடர்பாக விசாரணை நடத்த தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு எதிர்க்கட்சி முன்வைத்த கோரிக்கையை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நிராகரித்துள்ளார்.

நேற்று (09) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது, தனது தீர்மானத்தை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நீதித்துறையின் உள்நிலை விவகாரங்களில் தலையிட சட்டவாக்க சபைக்கு அரசியலமைப்புச் சட்டப்படி அதிகாரம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

மேலும், இத்தகைய தெரிவுக்குழுவொன்றை அமைப்பது, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப் பிரிவினை (Separation of Powers) என்ற அடிப்படைக் கொள்கையை மீறும் செயலாகும் என்றும் சபாநாயகர் வலியுறுத்தினார்.

புதியது பழையவை