பாதாள உலகத்துடன் தொடர்புடையவராகக் கருதப்படும் ‘கொண்ட ரஞ்சி’ என்ற பெயரால் அறியப்படும் ரஞ்சித் குமார, இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற வேளையில் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் பாதுகாப்புப் படையினரால் அவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் விசாரணைகளின் பின்னர் மனைவியும் பிள்ளைகளும் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபரே ‘கொண்ட ரஞ்சி’ என அறியப்படும் ரஞ்சித் குமார எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது குறித்த சந்தேகநபர் டுபாய் பொலிஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், அவர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் 10 வருடங்களுக்கு செல்லுபடியாகும் ‘கோல்டன் விசா’ வைத்திருப்பவரெனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.