அமெரிக்காவின் மினியாபோலிஸில் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர், 37 வயதான பெண் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண் அதிகாரியை சிற்றூந்தால் மோத முயன்றதுடன், உண்மையில் மோதியதாகவும் ட்ரம்ப் கூறினார். இதன் பின்னர், சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகளையும் அவர் வெளியிட்டார்.
“இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதை நான் விரும்பவில்லை. ஆனால் அங்கு ஏற்பட்ட சூழ்நிலை மிகவும் வன்முறையானதும் கொடூரமானதும்” என ட்ரம்ப் தெரிவித்தார்.
