யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கட்டைக்காடு பகுதியில் பல ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
அப்பகுதியில் நிலவும் கடல் சீற்றம் மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக, காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரைக்கு ஒதுங்குவதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஆமைகளை பிடிப்பதும், அவற்றை இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால், கரையொதுங்கியுள்ள ஆமைகள் அகற்றப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதுடன், சில ஆமைகள் உருக்குலைந்த நிலையிலும் துர்நாற்றம் வீசும் சூழலிலும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
