இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
ஆறு நாட்கள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமாக பிரான்ஸ் மற்றும் லக்சம்பர்க் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜெய்சங்கர், அந்தச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரான்ஸில் இந்தச் சந்திப்பை நடத்தினார்.
இச்சந்திப்பின்போது, இந்தியா–பிரான்ஸ் இருநாட்டு உறவுகள், தற்போதைய சர்வதேச அரசியல் சூழ்நிலை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
இதனிடையே, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அடுத்த மாதம் இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார் என்பதும், அங்கு நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்ள உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.