மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தேவைக்காக வாகன இலக்கத் தகடுகளைப் பொறித்து விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை, M/s. South Asian Technologies (Pvt) Ltd நிறுவனத்திற்கு 5 ஆண்டுகளுக்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதற்காக நான்கு நிறுவனங்களிடமிருந்து விலைமனுக்கள் பெறப்பட்ட நிலையில், உயர் மட்ட நிரந்தரப் பெறுகைக் குழு முன்வைத்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
