வாகன உரிமையாளர்களுக்கு புதிய விதி: TIN இலக்கம் இனி கட்டாயம்!

 


 

இலங்கையில் வாகனங்களை பதிவு செய்யும் போதும் மற்றும் உரிமை மாற்றம் செய்யும் போதும், வரி செலுத்துவோர் தங்களின் TIN (Tax Identification Number) இலக்கத்தை சமர்ப்பிப்பது ஜனவரி 5 முதல் கட்டாயம் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை புதிய வாகனப் பதிவுகளுக்கும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமை மாற்றங்களுக்கும் ஒரே மாதிரியாக அமுல்படுத்தப்படுகிறது.

புதிய உரிமையாளர், தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் அல்லது வணிகப் பதிவு (Business Registration) இலக்கம் இவைகளுடன் இணைந்து, தனது TIN இலக்கத்தையும் திணைக்களத்தின் கணினி முறைமையில் பதிவு செய்வது அவசியமாகும்.

நாட்டின் வரி வருமானத்தை ஒழுங்குபடுத்தும் மற்றும் வரி வலையமைப்பை விரிவுபடுத்தும் அரசாங்கக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் உந்துருளிகள், கை உழவு இயந்திரங்கள், உழவு இயந்திரங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் ஆகியவற்றிற்கு இந்த விதிமுறை பொருந்தாது என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

புதியது பழையவை